/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு உதவதமிழாசிரியரின் கற்பித்தல் அணுகுமுறைகள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை

ADDED : அக் 03, 2024 04:14 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மெல்ல கற்கும் மாணவர்களுக்காக தமிழாசிரியர் உருவாக்கிய கற்பித்தல் அணுகுமுறைகளை மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ஆய்வு செய்த கலெக்டர் ஜெயசீலன் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டார். பிளஸ் 2 வகுப்பில் தமிழாசிரியர் எஸ்.ஆர்.சதீஷ்குமார் மெல்ல கற்கும் மாணவர்கள் பட்டியலை முறையாக தயாரித்தும், தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கியும் நன்றாக செயல்படுவதை பாராட்டினார். மனப்பாடத்திறன் குறைவு, சிறுவினாவில் கவனக்குறைவு, வாசிப்பதில் தடுமாற்றம், எழுத்துப்பிழை அதிகம், சோம்பலோடு படித்தல், அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமின்மை, கல்வியில் ஆர்வமின்மை, பாடங்களை கவனிப்பதில்லை, விடையாக வினாவே எழுதுதல் என பல்வேறு கற்றல் குறைபாடுகள் கண்டறிந்து மாணவர்களை அதற்கேற்ப வகைப்படுத்தி படிக்க வைக்கிறார்.
தமிழாசிரியர் எஸ்.ஆர்.சதீஷ் கூறியதாவது: சிவகங்கையில் பணிபுரியும் போது மெல்ல கற்கும் மாணவர்களை பற்றி பட்டியல் தயாரிக்க எனக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போதிருந்தே ஆர்வம். படிநிலைகளை நானே உருவாக்கினேன். 8 இயல் இருந்தால் 4 இயல் படித்தால் போதும். பழைய வினாத்தாள், மாதிரி வினாத்தாள்களை படிக்க செய்வேன். சொந்த நடையில் எழுதக்கூடிய கேள்விகள் சில பாடத்தில் வரும். கம்பராமாயணம், சிலப்பதிகாரத்தை கதை போல் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து அவர்கள் கவனித்தால் அவர்களே எழுதி விடுவர்.
ஒரு மதிப்பெண் வினாக்கள் புத்தகத்திற்கு பின்னால் உள்ளதை மட்டும் படிக்க வைப்பது. அதை படித்தால் 10 ஒரு மதிப்பெண் புத்தகம் பின்னால் இருந்து வரும், என்றார். இவருடைய இந்த முயற்சியை பாராட்டியதோடு நிற்காமல் இதை மாநில பள்ளிக்கல்வித்துறை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.