/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
120 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம்
/
120 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம்
ADDED : பிப் 09, 2024 04:03 AM

ராஜபாளையம்: விருதுநகர் -- தென்காசி ரயில் வழித்தடத்தில் தண்டவாளத்தை பலப்படுத்தும் பணிகளைத் தொடர்ந்து மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் சோதனை ரயில் சென்றது.
விருதுநகர்- -- தென்காசி ரயில் வழித்தடத்தில் தற்போது பயணிகள் ரயிலின் வேகம் அதிகபட்சமாக 100 கி.மீ.,ல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வேகத்தை மணிக்கு 110 கி.மீ., உயர்த்தும் பணிகள் தீவிர படுத்தப்பட்டு இதற்காக பழைய தண்டவாளங்கள் மாற்றப்பட்டு அதிக வேகத்தை தாங்கும் திறன் கொண்ட பலமான தாண்டவளங்களை பொருத்துவது, அடித்தள மண்ணை பலப்படுத்துவது அதிர்வுகளை தாங்க ஜல்லிக்கற்கள், வளைவுகளை சற்று நேராகி குறுக்கீடு பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைப்பது பணிகள் நடந்து முடிந்துள்ளது.
அடுத்து தற்போதுள்ள ரயில்களின் வேகத்தை 110 கி.மீ., அதற்கான சோதனை ரயில் நேற்று காலை தென்காசியில் இருந்து கிளம்பி மதியம் 12:10 மணிக்கு ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனை 120 கி.மீ வேகத்தில் கடந்து சென்றது. சோதனை ரயிலில் மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.
ரயிலானது விருதுநகரை அடைந்து அங்கிருந்து மானாமதுரை வழியே மதுரைக்கு சென்றது. சோதனை ரயில் பெட்டியில் இருந்த அதிகாரிகள் பதிவு செய்த தரவுகளை சமர்பிப்பர். இதன் அடிப்படையில் இவ் வழித்தடத்தில் பாதுகாப்பு கருதி முதல் கட்டமாக 110 கி.மீ வேகத்தில் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

