/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
400 மெ.டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு
/
400 மெ.டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு
400 மெ.டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு
400 மெ.டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு
ADDED : மார் 21, 2024 01:22 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் மார்ச் 16 முதல் ஜூன் 15 வரை 400 மெ.டன் அரவை கொப்பரை தேங்காய் ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் அரவை கொப்பரை தேங்காய் நாபட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 400 மெ.டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படவுள்ளது.தரப் பரிசோதனையின் அடிப்படையில், அரவை கொப்பரையில் அயல் பொருள்கள் ஒரு சதவீதத்திற்கு மிகாமலும், பூஞ்சாணம் தாக்கிய, கருப்பு நிற கொப்பரை 10 சதவீதத்திற்கு மிகாமலும், சுருக்கம் கொண்ட கொப்பரைகள் 10 சதவீதத்திற்கு மிகாமலும், சில்லு 10 சதவீதத்திற்கு மிகாமலும், ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமலும் நன்கு உலர வைத்து நியாயமான சராசரி தரங்களுடன் ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு அரவை கொப்பரைத் தேங்காயை கொண்டு வந்து கிலோவுக்கு ரூ.111.60 என்ற குறைந்தபட்ச ஆதார விலையில் விற்பனை செய்து பயன்பெறலாம். வங்கி கணக்கில் செய்யப்பட்டதற்கான தொகை நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 99523 41770, 04563- 222615 என்ற எண்ணிலும், மேற்பார்வையாளர்களை 70102 80754, 97903 87588, என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம், என்றார்.

