/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனைக்குசி.எஸ்.ஆர்., நிதியில் மிஷின்கள் வழங்கல்
/
விருதுநகர் அரசு மருத்துவமனைக்குசி.எஸ்.ஆர்., நிதியில் மிஷின்கள் வழங்கல்
விருதுநகர் அரசு மருத்துவமனைக்குசி.எஸ்.ஆர்., நிதியில் மிஷின்கள் வழங்கல்
விருதுநகர் அரசு மருத்துவமனைக்குசி.எஸ்.ஆர்., நிதியில் மிஷின்கள் வழங்கல்
ADDED : மார் 05, 2024 05:46 AM
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு என்.எல்.சி., தமிழ்நாடு பவர் லிமிடெட், துாத்துக்குடி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதி உதவியில் பெறப்பட்ட புதிய சி.ஆர்., எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் மிஷின்கள் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்காக கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். அதே போல எக்ஸ்ரே பரிசோதனை ஒரு மாதத்திற்கு 9 ஆயிரம் பேருக்கு எடுக்கப்படுகிறது.
இந்த பரிசோதனைகளுக்கு தனியார் ஸ்கேன் சென்டர்களில் அதிக செலவாகும் என்பதால் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கூடுதலாக புதிய மிஷின்களை வாங்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்து கலெக்டர் ஜெயசீலனிடம் தெரிவித்தது.
இந்நிலையில் என்.எல்.சி., தமிழ்நாடு பவர் லிமிடெட் துாத்துக்குடி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதி உதவியில் கதிரியக்கவியல், சிறுவர், பச்சிளம் குழந்தைகள் பிரிவுகளுக்கு ரூ. 42 லட்சத்தில் அல்ட்ரா சவுண்ட் மிஷின்கள், ரூ. 19 லட்சத்தில் சி.ஆர்.மிஷின்களை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் டீன் சீதாலட்சுமி, என்.எல்.சி., தமிழ்நாடு பவர் லிமிடெட், துாத்துக்குடி முதன்மை நிதி அலுவலர் தனபால், துணைப் பொது மேலாளர் சரவணன், முதன்மை மருத்துவ அலுவலர் சுபைர், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் அருண், துணைக்காணிப்பாளர் அன்புவேல், நிலைய மருத்துவ அலுவலர் முருகேசன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முரளிதரன் உள்பட மருத்துவர்கள், ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

