/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வகுப்பறை கட்டடங்கள் பற்றாக்குறை மாணவர்கள் அவதி
/
வகுப்பறை கட்டடங்கள் பற்றாக்குறை மாணவர்கள் அவதி
ADDED : மார் 11, 2024 04:59 AM
சிவகாசி: சிவகாசி அருகே எரிச்சநத்தம் ஊராட்சி துவக்க பள்ளியில் கட்டடங்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி எரிச்சநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பகுதியில் 145 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இங்கு 1965ல் கட்டப்பட்ட ஒரு வகுப்பறை கட்டடமும், 2000ல் கட்டப்பட்ட ஒரு வகுப்பறை கட்டடமும் உள்ளது. பழைய கட்டடம் சேதமடைந்த நிலையில் சமீபத்தில் சமூக ஆர்வலர்களின் உதவியோடு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு வகுப்பறையில் ஒன்று முதல் மூன்று வகுப்பிலான 80 மாணவர்களும், மற்றொரு வகுப்பறையில் நான்கு, ஐந்து வகுப்பு மாணவர்களும் படிக்கின்றனர். ஒரே வகுப்பறையில் அதிகமான மாணவர்கள் உள்ளதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. தவிர ஒரே நேரத்தில் ஆசிரியர்கள் பாடம் எடுக்கையில், மாணவர்கள் படிப்பதற்கு சிரமப்படுகின்றனர். மேலும் தேர்வு காலங்களில் தேர்வு எழுதுவதற்கு இடமில்லாமல் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்புள்ளது என ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர். எனவே இங்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

