/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்த நிலையில் வாறுகால் பள்ளி மாணவர்கள் அச்சம்
/
திறந்த நிலையில் வாறுகால் பள்ளி மாணவர்கள் அச்சம்
ADDED : நவ 06, 2024 05:37 AM

சிவகாசி: சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் பள்ளி அருகே திறந்த நிலையில் உள்ள வாறுகாலால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் இருந்து விளாம்பட்டி செல்லும் ரோட்டில் கழிவுநீர் செல்வதற்காக பெரிய வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரோட்டில் உள்ள பள்ளிகளுக்கு தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகின்றனர். தவிர சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் இதே ரோட்டில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து அதிகமாக நிறைந்து இருக்கும். இந்நிலையில் ரோட்டின் அருகே வாறுகால் திறந்த நிலையில் உள்ளது.
வளைவுப் பகுதி வேறு என்பதால் சற்று கவனம் தவறினாலும் உள்ளே விழ வாய்ப்பு உள்ளது. நடந்த சைக்கிளில் வருகின்ற மாணவர்கள் அச்சத்துடனே வர வேண்டி உள்ளது.
தவிர அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளதால் பஸ்சிற்காக மக்கள் திறந்த நிலை வாறுகால் அருகிலேயே காத்திருக்கின்றனர்.
எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் பாதுகாப்பான மூடி அமைக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

