/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மாணவர்கள் தவிப்பு
/
விருதுநகரில் பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மாணவர்கள் தவிப்பு
விருதுநகரில் பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மாணவர்கள் தவிப்பு
விருதுநகரில் பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மாணவர்கள் தவிப்பு
ADDED : டிச 19, 2025 05:53 AM

விருதுநகர்: விருதுநகரில் செவித்திறன் குறைவுடையோருக்கான பள்ளி சுற்றுச் சுவர் சேதம் அடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. விரைந்து சரி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் திருவள்ளூர் அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவன், மதிய உணவு சாப்பிடும் போது, சுவர் இடிந்து விழந்து சம்பவ இடத்திலே பலியானார். பராமரிப்பில் அரசு காட்டிய அலட்சியமே உயிர் பலிக்கு காரணம் என மாணவரின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதே போல் விருதுநகர் மாவட்டத்தில் பல அரசு பள்ளிச் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
விருதுநகர் சூலக்கரை மேட்டில் செவித்திறன் குறைவுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளியின் பின்பக்க சுற்றுச்சுவர் மிக மோசமான முறையில் சேதம் அடைந்துள்ளது. ஒரு பகுதி முழுவதுமே சரிந்துள்ளது. கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சுற்றுச்சுவர் சேதம்அடைந்து விட்டது.
ஆனால் தற்போது வரை சரி செய்யவில்லை. பள்ளியின் பின்புறம் இருள் சூழ்ந்த பகுதியே காணப்படுகிறது. குடியிருப்புகள் தள்ளி தள்ளி இருப்பதால் மைதானம் போன்ற இடைவெளி காணப்படுகிறது. சுவர் சேதம் உள்ளதால் விஷப்பூச்சிகள் எளிதில் பள்ளிக்குள் புக வாய்ப்புள்ளது. எனவே பள்ளிக்கல்வித்துறையினர் உடனடியாக சேதமடைந்த சுற்றுச்சுவரை சரி செய்ய வேண்டும்.

