/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் -- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை சேதம்
/
ஸ்ரீவில்லிபுத்துார் -- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை சேதம்
ஸ்ரீவில்லிபுத்துார் -- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை சேதம்
ஸ்ரீவில்லிபுத்துார் -- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை சேதம்
ADDED : பிப் 21, 2024 05:25 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படும் மதுரை --கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய திட்ட இயக்குனர் வேல்ராஜ் ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சேத்தூர் வழியாக கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான இடங்களில் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் தினமும் வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும், உடல் ஊனமும் ஏற்பட்டு வருகிறது. ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டுமென தினமலர் நாளிதழில் பிப்.17ல் செய்தி வெளியானது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய நாகர்கோவில் மண்டல திட்ட இயக்குனர் வேல்ராஜ், நேற்று முன்தினம் கிருஷ்ணன் கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழி சாலை பணிகள் நடக்கும் நிலையில், தற்போது சேதமடைந்துள்ள இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வசமுள்ளது. தற்போது தற்காலிக தீர்வாக ஓரிரு நாட்களில் குண்டும், குழியுமான ரோடுகள் சீரமைக்கப்படும், என்றார்.
நான்கு வழிச்சாலை பணிகள் முழு அளவில் முடிந்த பின்னர் தான் கிருஷ்ணன் கோயிலில் இருந்து சொக்கநாதன் புத்தூர் விலக்கு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை முழு அளவில் சீரமைக்கப்பட்டு மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

