/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வத்திராயிருப்பில் மீண்டும் களைகட்டும் மண் திருட்டு
/
வத்திராயிருப்பில் மீண்டும் களைகட்டும் மண் திருட்டு
வத்திராயிருப்பில் மீண்டும் களைகட்டும் மண் திருட்டு
வத்திராயிருப்பில் மீண்டும் களைகட்டும் மண் திருட்டு
ADDED : மே 09, 2025 01:17 AM
வத்திராயிருப்பு: வத்தராயிருப்பு தாலுகாவில் பல்வேறு கண்மாய்களில் மீண்டும் அரசு அனுமதியின்றி மண் திருட்டு சம்பவம் களைகட்ட துவங்கி உள்ளது.
செங்கல் சூளைத் தொழிலுக்காக கடந்தாண்டு கண்மாய்களிலிருந்து மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது. இதனால் வத்திராயிருப்பு தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய்களில் இரவு, பகலாக டிராக்டர்களில் போட்டி போட்டு மண்கள் அள்ளி கொண்டு செல்லப்பட்டது. தற்போது மண் அள்ளுவதற்கு அனுமதி இல்லாத நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளிலும், பல்வேறு கண்மாய்களிலும் சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக மண் அள்ளி வருகின்றனர்.
இதனால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் கூமாபட்டி விராக சமுத்திரம் கண்மாயில் சவுடுமண் ஏற்றிக்கொண்டு வந்த 2 டிராக்டர்களையும், ஒரு ஜேசிபி வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். டிராக்டர் டிரைவர்கள் தங்கமாரி 29, பாலசுப்ரமணியம் 24, ஜேசிபி டிரைவர் குருவையா 32 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

