/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செகந்திராபாத்- - கொல்லம் ரயில் ஸ்ரீவி.,யில் நின்று செல்ல அனுமதி தர எதிர்பார்ப்பு
/
செகந்திராபாத்- - கொல்லம் ரயில் ஸ்ரீவி.,யில் நின்று செல்ல அனுமதி தர எதிர்பார்ப்பு
செகந்திராபாத்- - கொல்லம் ரயில் ஸ்ரீவி.,யில் நின்று செல்ல அனுமதி தர எதிர்பார்ப்பு
செகந்திராபாத்- - கொல்லம் ரயில் ஸ்ரீவி.,யில் நின்று செல்ல அனுமதி தர எதிர்பார்ப்பு
ADDED : டிச 17, 2024 03:24 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி, திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக கொல்லம் செல்லும் ரயில் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் ஸ்டாப்பிங் வழங்க பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வழியாக விருதுநகர் வரை உள்ள ரயில்வே வழித்தடம் அகல் ரயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில், இந்த வழித்தடத்தில் இயங்கும் வெளி மாநில ரயில்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஸ்டாப்பிங் வழங்கவில்லை.
இதனால் 108 வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்க வருவதற்கு வெளி மாநில பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சபரிமலை சீசனை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள செகந்திராபாத்- கொல்லம் ரயிலிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்டேஷனில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை.
இது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களை மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள வைணவ பக்தர்களை மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.
இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் தென்பாரத நிர்வாகி சரவண கார்த்திக் கூறுகையில், 12 ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் தெய்வமாக விளங்கும் ஆண்டாள் ஆட்சி செய்யும் நகரான ஸ்ரீவில்லிபுத்தூர் என்பது 108 வைணவ தளங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டாளை தரிசிக்க பல்வேறு வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக இயங்கும் வெளி மாநில ரயில்களில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஸ்டாப்பிங் கொடுக்கவில்லை. இப்போது செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி வழியாக பல்வேறு வைணவ தளங்களை இணைக்கும் வகையில் இயங்கப்படும் கொல்லம் ரயிலில் ஸ்ரீவில்லிபுத்தூர் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை.
சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் உடனடியாக ஸ்டாப்பிங் வழங்க வேண்டும், என்றார்.

