sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருப்பதி கோயில் லட்டு விவகாரம் தவறு செய்தவர்களுக்கு தண்டனை சடகோப ராமானுஜ ஜீயர் வலியுறுத்தல்

/

திருப்பதி கோயில் லட்டு விவகாரம் தவறு செய்தவர்களுக்கு தண்டனை சடகோப ராமானுஜ ஜீயர் வலியுறுத்தல்

திருப்பதி கோயில் லட்டு விவகாரம் தவறு செய்தவர்களுக்கு தண்டனை சடகோப ராமானுஜ ஜீயர் வலியுறுத்தல்

திருப்பதி கோயில் லட்டு விவகாரம் தவறு செய்தவர்களுக்கு தண்டனை சடகோப ராமானுஜ ஜீயர் வலியுறுத்தல்


ADDED : செப் 27, 2024 03:07 AM

Google News

ADDED : செப் 27, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்:''திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் விலங்கு கொழுப்பில் தயாரான நெய் கலந்தவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்,'' என, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருமலை திருப்பதி லட்டு மகாபிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியால் உலகம் முழுதும் உள்ள பெருமாள் பக்தர்கள் மனம் புண்பட்டுள்ளது.

இந்த தவறை செய்தவர்களை வன்மையாக கண்டித்து அவர்களுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்து கடும் தண்டனையை மத்திய அரசு வழங்க வேண்டும்.

மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் உலகத்தில் இருக்கக்கூடிய எந்த மதத்தையும், எந்த கடவுளையும் இழிவாக யார் பேசினாலும் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க சட்டம் கொண்டுவர வேண்டும்.

திருப்பதி பெருமாள் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஹிந்து மக்களின் பெருமாள். எங்கள் பெருமாளையும், கோயில் விஷயத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மற்றவர்கள் கவலைப்பட தேவையில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனவே மேற்படி விஷயங்களை விமர்சிக்காமல் இருப்பது நல்லது.

திருவேங்கடமுடையானுக்காக செய்த பிரசாதத்தில் விஷமே இருந்தாலும் அதை நீக்கி அமிர்தமாக்கும் வல்லமை அவரது திருக்கண்களுக்கு உண்டு. எனவே உலக மக்கள் அனைவரும் பயப்பட தேவையில்லை.

இந்த பூவுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அறிந்தும், அறியாமலும் தவறு செய்து கொண்டிருப்போம். ஆண்டாள் திருப்பாவையில் பாடியபடி ரெங்கமன்னார், திருவேங்கடமுடையான், ராமானுஜர், மணவாள மாமுனிகளிடம் மன்னித்தருள பிரார்த்தனை செய்து கொள்வோம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us