/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாறுகால் பாலம் போட தோண்டி மூன்று மாதமாகியும் துவங்காத பணி குடியிருப்போர் அவதி

ADDED : ஜன 02, 2024 04:44 AM

சிவகாசி: சிவகாசி பி.கே.என்., ரோடு பேச்சியம்மன் கோயில் செல்லும் தெருவில் வாறுகால் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்டு மூன்று மாதம் ஆகியும் பணிகள் துவங்காததால் குடியிருப்புவாசிகள், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி பி.கே.என்., ரோட்டில் பேச்சியம்மன் கோயில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கோயில் செல்லும் தெருவில் வாறுகால் பாலம் அமைப்பதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பு ரோடு தோண்டப்பட்டு பணிகள் துவங்கியது. ஆனால் அதற்கு அடுத்த பணிகள் எதுவும் துவங்கவில்லை. தெரு முழுவதுமே ரோடு தோண்டப்பட்டதால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் அவதிப்படுகின்றனர். தினமும் இந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். குழந்தைகள், பெரியவர்கள் யாரும் கடந்து செல்ல முடியவில்லை. மேலும் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி திருப்பணிகள் நடந்து வருகின்றது அந்த பணிக்கும் இடையூறு ஏற்படுகின்றது. எனவே இங்கு உடனடியாக வாறுகால் பாலம் அமைக்கும் பணியில் துவங்க வேண்டும் என இப்பகுதி குடியிருப்புவாசிகள், பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்'