/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையம் மீன் வியாபாரிகள் மாற்று இடம் ஒதுக்க வலியுறுத்தல்
/
ராஜபாளையம் மீன் வியாபாரிகள் மாற்று இடம் ஒதுக்க வலியுறுத்தல்
ராஜபாளையம் மீன் வியாபாரிகள் மாற்று இடம் ஒதுக்க வலியுறுத்தல்
ராஜபாளையம் மீன் வியாபாரிகள் மாற்று இடம் ஒதுக்க வலியுறுத்தல்
ADDED : டிச 22, 2025 05:45 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் ஒட்டிய மெயின் ரோட்டில் தெருவோர மீன் வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டுமென வியாபாரிகள் நகராட்சி கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் மெயின் ரோட்டின் இரண்டு பக்கமும் 30க்கும் மேற்பட்ட சாலையோர தற்காலிக மீன் கடைகள் இருந்து வந்தன.
இக்கடைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் கழிவுகள் அருகில் உள்ள சாக்கடையில் கலப்பதால் துர்நாற்றம் இருப்பதாக குடியிருப்பு வாசிகளும், இடையூறால் சாலை விபத்துகளும் ஏற்பட்டு வந்ததாக போலீசார், நகராட்சி அதிகாரிகள் கடைகளை அப்புறப்படுத்த முயற்சி எடுத்தனர்.
சாலையோர மீன் வியாபாரிகள் நகராட்சி கமிஷனர் நாகராஜிடம் ,'' 30 ஆண்டுக்கும் அதிகமாக கடை வைத்திருக்கும் தங்களுக்கு வாழ்வாதாரம் பறிபோவதால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டணம் இன்றி மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும்'', என வலியுறுத்தி மனு அளித்தனர்.