ADDED : பிப் 03, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழில் நகரமாக்க வேண்டும்.
நாங்கள் பணியாற்றிய இந்த கூட்டுறவு நூற்பாலை மூடிய பிறகு உள்ளூர் தொழிலாளர்கள் வேலை தேடி ராஜபாளையம், சிவகாசி போன்ற நகரங்களில் பணியாற்றி வருகின்றனர். தற்போது படித்த இளைஞர்கள் உள்ளூரில் போதிய வேலை வாய்ப்பு இல்லாமல் ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் குடும்பத்தை விட்டு பிரிந்து வேலை செய்து வருகின்றனர். மூடி கிடக்கும் இந்த மில்லை அரசு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அல்லது தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்த வேண்டும். இந்த மில்லை மீண்டும் இயக்குவதால் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது ஸ்ரீவில்லிபுத்தூரை தொழில்நகராக மாற்ற முன் உதாரணமாக திகழும்.
-- நாராயணன், ஓய்வு பெற்ற மில் தொழிலாளி.

