/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய கலெக்டர் அலுவலகத்தில் குழாய்களில் குடிநீர் வரலை மக்கள் தவிப்பு
/
புதிய கலெக்டர் அலுவலகத்தில் குழாய்களில் குடிநீர் வரலை மக்கள் தவிப்பு
புதிய கலெக்டர் அலுவலகத்தில் குழாய்களில் குடிநீர் வரலை மக்கள் தவிப்பு
புதிய கலெக்டர் அலுவலகத்தில் குழாய்களில் குடிநீர் வரலை மக்கள் தவிப்பு
ADDED : செப் 09, 2025 03:39 AM

விருதுநகர்: விருதுநகரில் புதிய கலெக்டர் அலுவலகத்தில் குழாய்களில் குடிநீர் வராததால் குறைதீர் கூட்டத்திற்கு வந்த மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
விருதுநகரில் புதிய கலெக்டர் அலுவலகம் 6 தளங்களுடன் இயங்குகிறது. தரைத்தளத்தில் தேர்தல் அலுவலகம், குறைதீர் கூட்டரங்கம், முதல் தளத்தில் உணவு பாதுகாப்பு அலுவலகம், தொழிலக பாதுகாப்பு அலுவலகம், 2ம் தளத்தில் எல்காட் அலுவலகம், கருவூல அலுவலகம், 3ம் தளத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர், துணை கலெக்டர் முத்திரை அலுவலகம், 4ம் தளத்தில் கலெக்டர் அலுவலக அறை, 5ம் தளத்தில் கனிமவளத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 6ம் தளத்தில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன.
இதில் அந்தந்த வளாகத்தின் வெளிப்புறங்களில் ஆர்.ஓ., குடிநீருக்கான வசதியும், குழாய்களில் இருந்து தண்ணீர் வரும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கழிவறை குழாய்களில் தண்ணீர் வரும் சூழலில், ஆர்.ஓ., குடிநீர் பிளான்ட், அதையொட்டியுள்ள குழாய்களில் குடிநீர் வருவதில்லை. இது குடிப்பதற்கான குடிநீர். கலெக்டர் அலுவலகம் வரும் பலர் வழி தெரியாமல் திணறும் சூழலிலோ, மனு அளித்து விட்டு வெளியேறும் போதோ இந்த ஆர்.ஓ., குடிநீர் குடிக்க வருவர்.
அதற்கும் தற்போது வழியில்லாமல் உள்ளது. அலுவர்கள் பலர் கழிவறை சென்று அங்குள்ள குழாய்களில் உணவு பாத்திரங்களை கழும் அவலம் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்னைக்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அலுவலர்கள், ஊழியர்களின் அறையிலும் தண்ணீர் வருவதை சரி செய்ய வேண்டும்.