/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.154 கோடியில் அமையும் புறவழிச்சாலை; பயன்பாட்டிற்கு வருவதற்குள் சேதம் விரக்தியில் மக்கள்
/
ரூ.154 கோடியில் அமையும் புறவழிச்சாலை; பயன்பாட்டிற்கு வருவதற்குள் சேதம் விரக்தியில் மக்கள்
ரூ.154 கோடியில் அமையும் புறவழிச்சாலை; பயன்பாட்டிற்கு வருவதற்குள் சேதம் விரக்தியில் மக்கள்
ரூ.154 கோடியில் அமையும் புறவழிச்சாலை; பயன்பாட்டிற்கு வருவதற்குள் சேதம் விரக்தியில் மக்கள்
ADDED : நவ 02, 2024 07:19 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எல்லையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் பயன்பாட்டிற்கு வரும் முன்பே பல பகுதிகளில் சேதம் அடைந்துள்ளதை நெடுஞ்சாலை துறையும் கண்டு கொள்ளாமல் இருப்பது மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் நகருக்குள் செல்லாமல் நான்கு வழி சாலையை அடைவதற்கு ஏதுவாக ரூ.154 கோடியில், 10 கி.மீ., தூரம் வரை இரண்டு புறவழிச் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 2023ல், ஜனவரியில் இதற்கான பணிகள் துவங்கின. அருப்புக்கோட்டை எல்லை பகுதியில் கிழக்கிலிருந்து சுக்கிலநத்தம் ரோடு வழியாக ராமசாமிபுரம் சர்வீஸ் ரோடு வந்து நான்கு வழி சாலையை அணுக ஒரு புறவழிச் சாலையும், அருப்புக்கோட்டை எல்லையில் இருந்து கோபாலபுரம் வழியாக பாலையம்பட்டி நான்கு வழி சாலையை அணுகும் வகையில் மற்றொரு புறவழிச் சாலையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மந்தகதியில் பணிகள் நடப்பதால் டிசம்பர் மாதம் பணிகளை முடிக்க வேண்டியது தள்ளி போகிறது. ரோடு பணிகள் முடிந்தாலும், கோபாலபுரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே பாலம் அமைக்க வேண்டும். இது முடிந்தால் தான் 2 சாலைகளையும் பயன்படுத்த முடியும். பாலம் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கோபாலபுரம் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட ரோடுகளின் ஒர பகுதிகளில் பெயர்ந்து வருகிறது. ரோடுகளின் ஓரங்களில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆங்காங்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனாலும் ரோடு பெயர்ந்து விடும் அபாயம் உள்ளது. ரோட்டின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்படாத வகையில் தடுக்க வேண்டும். பல கோடி நிதியில் அமைக்கப்படும் ரோடு நீடித்து உழைக்கும் வகையில் தர மனதாக இருக்க வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் அடிக்கடி ஆய்வு செய்து உறுதிபடுத்த வேண்டும்.

