/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,ல் வேலை வாய்ப்பை அதிகரிக்க கூட்டுறவு நுாற்பாலை இடத்தில் தொழிற்பேட்டை வருமா மக்கள் எதிர்பார்ப்பு
/
ஸ்ரீவி.,ல் வேலை வாய்ப்பை அதிகரிக்க கூட்டுறவு நுாற்பாலை இடத்தில் தொழிற்பேட்டை வருமா மக்கள் எதிர்பார்ப்பு
ஸ்ரீவி.,ல் வேலை வாய்ப்பை அதிகரிக்க கூட்டுறவு நுாற்பாலை இடத்தில் தொழிற்பேட்டை வருமா மக்கள் எதிர்பார்ப்பு
ஸ்ரீவி.,ல் வேலை வாய்ப்பை அதிகரிக்க கூட்டுறவு நுாற்பாலை இடத்தில் தொழிற்பேட்டை வருமா மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 30, 2024 04:26 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் வேலை வாய்ப்பை அதிகரிக்க மூடப்பட்டிருக்கும் கூட்டுறவு நூற்பாலை இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
1962ல் காமராஜர் ஆட்சி காலத்தில் 50 ஏக்கர் பரப்பில் கூட்டுறவு நூற்பாலை கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் குறைந்தளவு தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த நிலையில் பின் படிப்படியாக நுாற்பாலை விரிவுபடுத்தப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினர். இதனால் ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராம மக்கள் மிகுந்த பயனடைந்தனர். அங்கு பணியாற்றியவர்களின் குடும்பங்கள் கல்வி, பொருளாதரத்தில் உயர்வடைந்தது. நகரில் பணப்புழக்கமும் அதிகரித்தது. வியாபாரங்கள் சிறப்பாக நடந்தது.
1998 வரை லாபம் ஈட்டி வந்த இந்த நூற்பாலை தனி அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டால் படிப்படியாக வீழ்ச்சியை நோக்கி பயணிக்க துவங்கியது. மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி செய்த போதிலும் 2003ல் மில் மூடப்பட்டது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
தற்போது சிவகாசியில் பட்டாசு ஆலைகளுக்கும், ராஜபாளையம் ஸ்பின்னிங் மில்களுக்கும் வேலைக்கு சென்றனர். ஏராளமான இளைஞர்கள் திருப்பூர் கோவைக்கு இடம் பெயர்ந்தனர்.
கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிய வில்லை.
இந்நிலையில் இந்த இடத்தை மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் கூறினார். பொழுதுபோக்கு தீம் பார்க் அமைக்கலாமா அல்லது வேறு என்ன செய்வது என மக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
தற்போது ஸ்ரீவில்லிபுத்துாரில் மக்கள் தொகை ஒரு லட்சத்தை நெருங்கும் நிலையில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி, குடும்பத்தை பிரிந்து வெளி மாவட்டங்களுக்கு வேலை தேடி சென்றுள்ளனர்.
அவர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் தற்போது உள்ள இடத்தில் மாபெரும் தொழிற்பேட்டை அமைத்து தொழில் நகரமாக ஸ்ரீவில்லிபுத்துாரை மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

