/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முடிவு பெறாத மேம்பாட்டு பணிகள் நெரிசலை குறைக்க எதிர்பார்ப்பு
/
முடிவு பெறாத மேம்பாட்டு பணிகள் நெரிசலை குறைக்க எதிர்பார்ப்பு
முடிவு பெறாத மேம்பாட்டு பணிகள் நெரிசலை குறைக்க எதிர்பார்ப்பு
முடிவு பெறாத மேம்பாட்டு பணிகள் நெரிசலை குறைக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 07, 2024 12:16 AM
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் மேம்பாட்டு பணிகள் முடிவு பெறாத நிலையில் மெயின் பகுதி மற்றும் இணைப்புச் சாலைகளில் உள்ள தடைகளை நீக்கி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையத்தில் 2018 முதல் பாதாள சாக்கடை, தாமிரபரணி குடிநீர், ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பணிகளுக்காக நகர் முழுவதும் தோண்டப்பட்டு தற்போது வரை பணிகள் நடந்து வருகிறது.
தொடர்ச்சியாக சாலைகளில் மேடு, பள்ளம் தடைகள் உள்ளிட்ட பிரச்சனையால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணிகள் முழுமை அடையாத நிலையில் தற்காலிக தீர்வாக மெயின் ரோட்டிற்கு இணைப்பு பாதைகளான ரைஸ் மில் ரோடு, ஹாஸ்பிடல் ரோடு, குமரன் தெரு, மாடசாமி கோவில் தெரு, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் தடைகளை சரி செய்ய வேண்டும்.
குறிப்பாக பகல் நேரங்களில் தடை ஏற்படுத்தும் விதமாக சரக்கு லாரிகளை நிறுத்தி லோடு இறக்குவதற்கு நேர கட்டுப்பாடு, ரோட்டில் வாகனங்களை நிறுத்த தடை, குறிப்பிட்ட நேரங்களில் ஒரு வழி பாதையாக மாற்றுவது என தற்காலிக தீர்வுகளை முறைப்படுத்த வேண்டும்.
இவற்றை போக்குவரத்து, நகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து கண்காணிக்க வேண்டும்.

