/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உள்ளாட்சிகளில் சேதமான நிழற்குடைகள் தவிப்பில் பயணிகள்
/
உள்ளாட்சிகளில் சேதமான நிழற்குடைகள் தவிப்பில் பயணிகள்
உள்ளாட்சிகளில் சேதமான நிழற்குடைகள் தவிப்பில் பயணிகள்
உள்ளாட்சிகளில் சேதமான நிழற்குடைகள் தவிப்பில் பயணிகள்
ADDED : அக் 09, 2024 05:28 AM

சாத்துார்: சாத்துார், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் சேதம் அடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை கட்டித் தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் சிந்தப் பள்ளி, ஒ.மேட்டுப்பட்டி இருக்கன்குடி, நென்மேனி, சாத்துார் நகராட்சியில் படந்தால் ஜங்ஷன், குரு லிங்கபுரம், பயணிகள் நிழற்குடைகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் விளாமரத்துப்பட்டி, கீழத் தாயில்பட்டி, டி.கோட்டையூர், பூசாரி நாயக்கன்பட்டி, சத்திரப்பட்டி, ஏழாயிரம்பண்ணை ஆரம்ப சுகாதார நிலையம், மேட்டூர், துாங்கா ரெட்டி பட்டி பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடைகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் சேதமடைந்த நிழற்குடை யில் உயிரை கையில் பிடித்தப்படி நின்று பஸ் ஏறிச் செல்கின்றனர். மழைக்காலத்தில் பயணிகள் சேதமடைந்த நிழற்குடையில் நிற்க தயங்கி மழையில் நனைந்தபடி நின்று பஸ் ஏறி செல்கின்றனர்.
ஊராட்சிகளில் போதுமான நிதி இல்லாத நிலையில் ஊராட்சித் தலைவர்கள் எம்.எல்.ஏ., எம்.பி., இடம் தங்கள் ஊருக்கு பயணிகள் நிழற்குடை கட்டித் தரும் படி பலமுறை நேரில் மனு அளித்தும் வலியுறுத்தியும் எம்.பி. எம்.எல்.ஏ க்கள் கண்டு கொள்ளாமல் உள்ளதால் மக்கள் அவதிப்படுவது தொடர் கதையாக உள்ளது. தாமதிக்காமல் சேதமடைந்த நிழற்குடையை கண்டறிந்து அகற்றிவிட்டு புதிய நிழற்குடை கட்டித் தர மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

