/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மினி பஸ் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு ஆட்டோக்களில் அதிக கட்டண வசூலிப்பால்

ADDED : செப் 09, 2025 03:32 AM
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் காலை, மாலை நேரங்களில் மட்டும் பஸ்கள் இயக்கப்படுவதால் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டியதுள்ளது. இதனால் பயணிகள் மினி பஸ்கள் இயக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனிற்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்காக காலை, மாலை நேரங்களில் அரசு பஸ்கள், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இயக்கப்படுகிறது. ஆனால் மற்ற நேரங்களில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் ஆட்டோக்களை ரயில் பயணிகள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பயணிகளை ஏற்றி பழைய பஸ் ஸ்டாண்டிற்கு செல்வதற்கு ரூ.150 வரை வாங்குகின்றனர். இதனால் பயணிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதே போல லட்சுமி நகர், பாண்டியன் நகர், பெத்தனாட்சி நகர், மீனாட்சி நகர், மற்ற பகுதிகளுக்கு அதிகமாக கட்டணங்களாக நிர்ணயம் செய்து வசூலிக்கின்றனர். இதனால் ஆட்டோக்களில் செல்வதை தவிர்த்து நடந்தும், லிப்ட் கேட்டும் செல்லும் நிலை பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் உள்ளூர், வெளியூர் பயணிகள் தினசரி பரிதவித்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் விருதுநகரை சுற்றிய பகுதிகளுக்கு இயங்கும் மினி பஸ்களை ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று வரும் படி இயக்கினால் ரயில் பயணிகளின் தினசரி சிரமம் போக்கும் நடவடிக்கையாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.