/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிருஷ்ணன்கோவிலில் செயல்படாத ஏ.டி.எம்.கள்
/
கிருஷ்ணன்கோவிலில் செயல்படாத ஏ.டி.எம்.கள்
ADDED : ஆக 14, 2025 02:23 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன்கோவிலில் ஏ.டி.எம்.கள் அடிக்கடி செயல்படாமலும், பணம் இல்லாமலும் காணப் படுவதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கிருஷ்ணன்கோவிலை சுற்றி போக்குவரத்து நகர், குன்னூர், வலையபட்டி, பாட்டக்குளம், விழுப்பனூர் உட்பட பல கிராமங்கள் உள்ளன. கிருஷ்ணன் கோவிலில் 3 வங்கிகளின் ஏ.டி.எம்.கள் உள்ளன. இதனைப் பயன்படுத்தி அப்பகுதி மக்கள் பணம் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சில ஏ.டி.எம். கள் செயல்படாமலும், பணம் இல்லாமலும் உள்ளதால் கிராமத்து மக்கள் அவசர நேரத்திற்கு பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, அனைத்து ஏ.டி.எம்.களும் 24 மணி நேரமும் செயல்படுவதை வங்கி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

