/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சகதியான ரோடு: அவதியில் மக்கள்
/
சகதியான ரோடு: அவதியில் மக்கள்
ADDED : டிச 22, 2025 06:03 AM

திருச்சுழி: திருச்சுழி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள ரோடு தொடர் மழைக்கு சேறும் சகதியும் ஆக மாறிவிட்டதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
திருச்சுழி தாலுகா அலுவலகம் அருகில் அய்யனார் கோயில் செல்லும் பாதை உள்ளது. இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இது ஏற்கனவே மண் பாதையாக இருப்பதால் மேடும் பள்ளமும் ஆக உள்ளது.
இந்நிலையில் 7 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையில் ரோடு சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இந்தப் பகுதி மக்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். டூவீலர்களில் செல்பவர்களின் டயர்கள் சேற்றில் சிக்கிக் கொள்கிறது. தெருவில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் ரோடு அமைக்க வேண்டும்.

