/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதியில் விட்டு சென்ற சாலைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
பாதியில் விட்டு சென்ற சாலைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பாதியில் விட்டு சென்ற சாலைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பாதியில் விட்டு சென்ற சாலைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 14, 2024 05:52 AM
ராஜபாளையம், : ஒப்பந்ததாரர் பணியில் பாதியில் விட்டு சென்ற சாலைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர், என ராஜபாளையம் நகராட்சிக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
ராஜபாளையம் நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நகராட்சி தலைவர் பவித்ரா தலைமையில் நடந்தது. கமிஷனர் நாகராஜன், பொறியாளர் முகமது ஷெரீப், வருவாய் ஆய்வாளர் முத்துசெல்வம், சுகாதார ஆய்வாளர் தர்மராஜ் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
ராதா,( தி.மு.க.,): ஒப்பந்ததாரர் மாற்றி ரோடு பணிக்காக தோண்டிவிட்டதாக பாதியில் விட்டுச்சென்ற சாலையில் குடியிருப்பு வாசிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
முகம்மது ஷெரீப், நகராட்சி இன்ஜினியர்: ஒப்பந்ததாரரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும்
ஜெயசுதா, (தி.மு.க.,): 16 தெருக்களில் நான்கு ரோடு மட்டும் போட்டுள்ளனர். இது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டால் 90 சதவீதம் பணி முடிந்ததாக கூறுகின்றனர். மேடு பள்ளங்களில் விழுந்து பாதிக்கப்பட்டோர் வீட்டிற்கு வந்து முறையிடுகின்றனர்.
பவித்ரா, தலைவர்: அனைத்து வார்டுகளிலும் சமமாக பிரித்து பணிகள் நடந்து வருகிறது. எந்த பாரபட்சமும் இல்லை. விரைவு படுத்த கூறி இருக்கிறோம்.
ஏ.டி.சங்கர் கணேஷ் (காங்.,): பேவர் பிளாக், சிமெண்ட்ரோடு பணிகளுக்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் ஏற்கனவே போடப்பட்டு விட்டது. அரசும், உள்துறை செயலாளரும் ரோட்டை தோண்டி போட சொல்லி அறிக்கை வெளியிட்டிருப்பதால் மக்கள் குழப்பம் அடைந்து பணிகளின் போது வாக்குவாதம் செய்கின்றனர். இது குறித்து தீர்மானம் இயற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.
முகம்மது ஷெரீப், இன்ஜினியர்: இது பற்றி சில இடங்களில் பிரச்சனை எழுகிறது. தகுந்த விளக்கம் அளித்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
நாகராஜன், கமிஷனர்: பாதாள சாக்கடை முழுமை அடையாததால் நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. அதுவரை ஏற்படும் குறைபாடு செலவினங்களுக்கு ஒப்பந்ததாரரிடம் வசூலிக்கப்படும்.
ஞானவேல், (தி.மு.க.,): வார்டில் உள்ள சுகாதார வளாகம் ஏலம் விடப்படாதது காரணம் கூறி திறக்காததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பவித்ரா, தலைவர்: ஏலம் எடுக்கும் வரை தாமதிக்காமல் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

