/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டை பாலத்தில் மேவிய மண் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
அருப்புக்கோட்டை பாலத்தில் மேவிய மண் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
அருப்புக்கோட்டை பாலத்தில் மேவிய மண் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
அருப்புக்கோட்டை பாலத்தில் மேவிய மண் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 08, 2024 06:37 AM

விருதுநகர், ; விருதுநகர் அருப்புக்கோட்டை பாலத்தில் மேவிய மண்ணால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.
விருதுநகர் அருப்புக்கோட்டை பாலத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் ரோடு போடப்பட்டது. ரோட்டை தோண்டி போடாமல், ரோடு மேலே ரோடு போட்டதால் ஒராண்டுக்கு முன் டூவீலரில் வந்த வாலிபர்கள் இருவர் தடுப்பில் மோதி விழுந்தனர். இதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
ரோடு போட்ட பிறகு பெரிய அளவில் மண்மேவவில்லை. இந்நிலையில் தற்போது பாலத்தில் அதிகளவில் மண் மேவி காணப்படுகிறது. குறிப்பாக வளைவுகளில் திரும்பும் போது வழுக்கி விடக்கூடாது என்பதற்காக வலதுபுறம் வருகின்றனர்.
அப்போது பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் மோதுகின்றன. இது அருப்புக்கோட்டை பாலத்தில் தொடர்கதையாகவே உள்ளது. கார், கனரக வாகனங்கள் ஓட்டுபவர்கள் டூவீலர் ஓட்டுவோரை ஓரங்கட்டுவதால் மேவிய மண்ணில் ஓட்டி தடுமாறுகின்றனர். மாநில நெடுஞ்சாலைத்துறை அருப்புக்கோட்டை பாலத்தில் அதிகரித்துள்ள மண்ணை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பாலத்தின் தடுப்பு சுவர்களை உயர்த்த வேண்டும். அல்லது இரும்பு கம்பிகளை தடுப்பு அமைக்க வேண்டும். இல்லையெனில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் மோதி படுகாயத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது.

