/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாற்றுப் பாதையான ஆனையூர் ரோட்டில் சரிந்து விழுந்த மண் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
மாற்றுப் பாதையான ஆனையூர் ரோட்டில் சரிந்து விழுந்த மண் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
மாற்றுப் பாதையான ஆனையூர் ரோட்டில் சரிந்து விழுந்த மண் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
மாற்றுப் பாதையான ஆனையூர் ரோட்டில் சரிந்து விழுந்த மண் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 27, 2024 04:36 AM

சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடக்கின்ற நிலையில் முக்கிய மாற்றுப்பாதையான ஆனையூர் ரோட்டில் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். ரோட்டோரத்தில் மண் சரிந்து விழுந்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிவகாசி ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றது. இதனால் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள், பஸ்கள் அனைத்தும் மாற்றுப்பாதையான ஒத்த புலி விலக்கு, லட்சுமியாபுரம், ஆனையூர் ரோட்டில் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் ஒரு பகுதியில் ஓடை, கண்மாய் உள்ளது.
இந்நிலையில் மிகவும் குறுகலான இந்த ரோட்டில் வாகனங்கள் எளிதில் சென்று வர முடியவில்லை.
டூவீலரில் சொல்பவர்களே எதிரெதிரே விலகிச் செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகின்றது. பெரிய வாகனங்கள் வந்தால் நின்று பொறுமையாக விலக வேண்டி உள்ளது. கொஞ்சம் தடுமாறினாலும் ரோட்டை விட்டு கீழே இறங்கி ஓடை அல்லது கண்மாயில் விழ நேரிடும்.
இந்நிலையில் லட்சிமியாபுரம் அருகே ரோட்டோரத்தில் மண் சரிந்து விழுந்தது. இதில் சென்ற வாகனமும் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி இரு நாட்கள் போக்குவரத்து மாற்றி விடப்பட்ட நிலையில் தற்காலிகமாக ரோடு சிறிதளவு அகலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்காலிகமாக பேரிகார்டு மூலமாக தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இரவில் வரும் வாகனங்கள் கண்டிப்பாக தவறி விழ வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் தடுப்புச் சுவர் உயர்த்தி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

