/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை முதல் ஜன. 18 வரை
/
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை முதல் ஜன. 18 வரை
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை முதல் ஜன. 18 வரை
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை முதல் ஜன. 18 வரை
ADDED : டிச 28, 2025 05:48 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பசு, எருமை இனங்களை கோமாரி நோயில் இருந்து பாதுகாக்கும் வகையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான 8வது சுற்று தடுப்பூசி முகாம் டிச. 29 (நாளை) முதல் ஜன. 18 வரை நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 700 பசு, எருமை இனங்களை கோமாரி நோயில் இருந்து காக்கும் வகையில் தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டம் மூலம் இம்முகாம் நடக்கிறது.
மாவட்டத்தின் 82 கால்நடை மருந்தகங்கள், 6 கால்நடை மருத்துவமனைகளில் கோமாரி நோய்க்கான தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். கால்நடை உதவி டாக்டர், கால்நடை ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 58 குழுக்கள் இம்முகாமிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.