/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கேரம் போட்டியில் மதுரை கே.ஆர்.எஸ்., பள்ளி வெற்றி
/
கேரம் போட்டியில் மதுரை கே.ஆர்.எஸ்., பள்ளி வெற்றி
ADDED : ஆக 28, 2025 04:42 AM
மதுரை : மதுரை சகோதயா பள்ளிகள் காம்ப்ளக்ஸ் சார்பில் திருமங்கலம் என்.ஆர்.எம்.,ட்ரீம் சர்வதேச பள்ளியில் சி.பி.எஸ்.இ., பள்ளி களுக்கான கேரம் போட்டி நடந்தது.
இதில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.,) சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்றனர்.
பெண்கள் 17 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் அபர்ணா முதலிடம், 19 வயது பிரிவில் டி.அபிநயா முதலிடம், 14 வயது பிரிவில் வர்னிகா சின்மயி இரண்டாமிடம் பெற்றனர். பெண்கள் 12 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் ரக்ஷனா, சாய்சஞ்சனா ஜோடி, 14 வயது பிரிவில் வர்னிகா சின்மயி, ஜோவிதா ஜோடி, 17 வயது பிரிவில் அபர்ணா, தீபா ஜோடி, 19 வயது பிரிவில் டி.அபிநயா, வி.அபிநயா ஜோடி முதலிடம் பெற்றனர்.
ஆண்கள் 12 வயது ஒற்றையர் பிரிவில் பாக்கிய சாய்ராம், 17 வயது பிரிவில் கார்த்தி கேயன் மூன்றாமிடம், 19 வயது பிரிவில் வீரபாலமுருகன் இரண்டாமிடம் பெற்றனர்.
12 வயது இரட்டையர் பிரிவில் தேஜஸ், பாக்கிய சாய்ராம் ஜோடி, 14 வயது பிரிவில் ஸ்ரீசரண், அருள் முருகன் ஜோடி, 17 வயது பிரிவில் ஹரிஸ், கார்த்திகேயன் ஜோடி முதலிடம் பெற்றனர். 19 வயது பிரிவில் வீரபால முருகன், விக்னேஸ்வரன் ஜோடி மூன்றாமிடம் பெற்றனர். முதல்வர் சூர்ய பிரபா, உடற்கல்வி ஆசிரியர் சக்திபிரகாஷ் பங்கேற்றனர்.