/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
l டூவீலர் நம்பர் பிளேட், அமைப்பை மாற்றுதல் அதிகரிப்பு; தொடர் கண்காணிப்பு தேவை
/
l டூவீலர் நம்பர் பிளேட், அமைப்பை மாற்றுதல் அதிகரிப்பு; தொடர் கண்காணிப்பு தேவை
l டூவீலர் நம்பர் பிளேட், அமைப்பை மாற்றுதல் அதிகரிப்பு; தொடர் கண்காணிப்பு தேவை
l டூவீலர் நம்பர் பிளேட், அமைப்பை மாற்றுதல் அதிகரிப்பு; தொடர் கண்காணிப்பு தேவை
ADDED : ஜூன் 06, 2024 05:29 AM
மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், காரியப்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் ஆகிய நகர் பகுதிகள், புறநகர், ஊரகப்பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வீட்டிற்கு ஒரு டூவீலர் இருந்த காலம் போய் நபருக்கு ஒரு டூவீலர் என்ற எண்ணிக்கை உள்ளது.
டூவீலர்களை தங்கள் விருப்பதிற்கு ஏற்றவாறு மறு சீரமைப்பு செய்து பயன்படுத்துகின்றனர். இவை அதிக திறன் கொண்டதாகவும், அரசின் விதிமுறை பின்பற்றப்படாமல் மாற்றி அமைக்கப்பட்டு இயக்குவதால் வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் அரசு விதிமுறைகள் படி உள்ள நம்பர் பிளேட்களை மட்டுமே பொருத்த வேண்டும்.
ஆனால் உரிமையாளர்கள் வித்தியாசமான ஆங்கில எழுத்துக்கள், தங்களின் பதவிகள், கட்சி, அமைப்புகளின் கொடி நிறத்தில் வாகன எண்கள், வாகனத்தில் நிறத்தையே மாற்றி பயன்படுத்துகின்றனர்.
சரக்கு வேன்களில் மண், ஜல்லி, கற்கள் ஆகியவை எளிதாக கொட்டுவதற்கு ஏதுவாக வேனின் தொட்டியை மறுசீரமைப்பு செய்து லாரி, டிராக்டர் போன்ற அமைப்புகளாக மாற்றி புறநகர், ஊரகப்பகுதிகளில் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதற்கு அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறுவதில்லை.
இது போன்ற வாகனங்களை சோதனையின் போது மட்டுமே அதிகாரிகள் கண்டறிந்து அபராதம் விதிக்கின்றனர். புதிய வாகனங்களின் அமைப்பில் எந்த ஒரு மாற்றம் செய்வதாக இருந்தாலும் அதிகாரிகளின் அனுமதி பெற்று அதன் பின் செய்ய வேண்டும் என்ற விதிமுறை முறையாக பின்பற்றப்படுவதில்லை.
எனவே மாவட்டத்தில் டூவீலர், வேன்களின் அமைப்பை உரிய அனுமதியின்றி மாற்றி பயன்படுத்தப்படும் வாகனங்களை கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

