ADDED : பிப் 08, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம், : மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்க செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா அறிக்கையில்: ஏழைகள் பெண்கள் இளைஞர்கள் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டம், மாநிலங்களுக்கு 75 ஆயிரம் கோடி வட்டி இல்லா கடன், ரயில்வே துறையில் மாநிலத்திற்கு ரூ. 6331 கோடி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. சிறு, குறு நிறுவனங்கள் வணிகர்களின் மேம்பாட்டிற்குரிய எந்த திட்டமும் இல்லாதது வருந்த தக்கது.

