/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கள்ளிக்குடி-திருச்சுழி ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற எதிர்பார்ப்பு
/
கள்ளிக்குடி-திருச்சுழி ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற எதிர்பார்ப்பு
கள்ளிக்குடி-திருச்சுழி ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற எதிர்பார்ப்பு
கள்ளிக்குடி-திருச்சுழி ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற எதிர்பார்ப்பு
ADDED : அக் 10, 2024 06:07 AM
காரியாபட்டி: சதுரகிரி மகாலிங்கம் மலை, திருச்சுழி ரமண மகரிஷி கோயில் இருப்பதால் சுற்றுலா பயணிகள், பக்தர்களின் வருகையால் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதையடுத்து கள்ளிக்குடி திருச்சுழி ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் காரியாபட்டி வழியாக திருச்சுழி ரமண மகரிஷி கோயிலுக்கு, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோயில்களுக்கும், அதே போல் ராமநாதபுரம் பகுதியிலிருந்து மகாலிங்கம் மலை, ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிக்கும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
டி. கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, காரியாபட்டி திருச்சுழி, பார்த்திபனூர் வரை இருவழிச் சாலையாக, ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இரு வாகனங்கள் விலகிச் செல்வதில் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. கொண்டை ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
பெரும்பாலான ஊர்களில் இருபுறமும் வீடுகள் சூழ்ந்து ஒரு வழி பாதையாக இருந்து வருகிறது. ஒரு வாகனம் சென்ற பின் மறு வாகனம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஏதாவது இடையூறு ஏற்பட்டால், பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும்.
இல்லாவிட்டால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில் ஆத்திர அவசரத்திற்கு வாகனங்கள் எங்கும் செல்ல முடியவில்லை. முக்கிய தலைவர்கள் வருகை என்பது மாற்று வழி ஏற்பாடு செய்கின்றனர்.
இதுபோன்ற ரோடுகளில் அதிக வாகனங்கள் வருவதால் ஸ்தம்பிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு கள்ளிக்குடி, திருச்சுழி ரோட்டை நான்கு வழி சாலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

