/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் காட்டு விலங்குகள் --வேட்டையாளர்கள் குறித்து கண்காணிப்பு அவசியம்

ADDED : மார் 04, 2024 04:43 AM
ராஜபாளையம்: கோடையின் தாக்கம் அதிகரித்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தண்ணீர் தேடி விளை நிலங்களுக்குள் காட்டு விலங்குகள் புகுவது அதிகரித்துள்ளது. இவற்றின் நடவடிக்கையை எதிர்பார்த்து விலங்குகள் வேட்டையில் ஈடுபட்டுள்ளவர்களை வனத் துறையினரின் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் யானைகள், மிளா, மான்கள், காட்டுப்பன்றி, காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பல்வேறு பறவை இனங்கள் உட்பட பல வகையான வன உயிரினங்கள் வாழ்விடமாக திகழ்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பருவ மழை அதிகம் இருந்ததால் வனப்பகுதிகளில் நீராதாரங்கள், குளங்கள் நீர் இருப்பு காணப்பட்டது.
இந்நிலையில் கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மலைப்பகுதியில் இருந்த நீராதாரங்கள் வேகமாக வற்றி வருகின்றன.
இதை அடுத்து தண்ணீர் மற்றும் உணவை தேடி காட்டு மாடுகள், மான்கள், காட்டுப்பன்றிகள் மலையை ஓட்டி உள்ள விளை நில பகுதியை நோக்கி நகர்கின்றன.
இதை எதிர்பார்த்து வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபடும் சமூக விரோதிகள் பட்டா நிலங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள் போர்வையில் வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர்.
ராஜபாளையம் தென்றல் நகர் அடுத்த பகுதி, முடங்கியார் ரோடு தனியார் பள்ளி அருகிலும் முகாமிட்டுள்ள இக் கூட்டத்தை கண்காணிப்பதுடன் வனத்தில் உள்ள செயற்கை குளங்களில் தினமும் வனவிலங்குக்கான தண்ணீர் நிரப்பப்படுவதை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.