/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முழுவீச்சில் விசாகா கமிட்டி செயல்படுவது அவசியம்
/
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முழுவீச்சில் விசாகா கமிட்டி செயல்படுவது அவசியம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முழுவீச்சில் விசாகா கமிட்டி செயல்படுவது அவசியம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முழுவீச்சில் விசாகா கமிட்டி செயல்படுவது அவசியம்
ADDED : ஜூலை 30, 2024 06:20 AM

பெண்கள் பணிபுரியும் இடத்தில் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் குறித்து தைரியமாக புகார் கொடுத்து தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்டது 'விசாகா கமிட்டி'. மாவட்டத்தில் அரசு துறைகள், மருத்துவமனைகள், பட்டாசு, தீப்பெட்டி, மில்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், ஜவுளிக்கடை, தனியார் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பெண்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர்.
இதில் பத்து ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் விசாகா கமிட்டி ஏற்படுத்தி செயல்படுவதை கண்காணிப்பது கட்டாயம். இந்த விசாகா கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். கமிட்டியில் 50 சதவிதத்தினர் பெண்களாக இருத்தல் வேண்டும். அதில் ஒரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல் ஏதேனும் தன்னார்வல தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நபராக இருக்க வேண்டும்.
இந்நிலையில் செயல்படும் கமிட்டி ஆண்டு தோறும் அதன் செயல்பாடுகளை அரசிற்கு அறிக்கையாக கொடுக்க வேண்டும். ஆனால் மாவட்டத்தில் விசாகா கமிட்டி செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பெண்கள் பணிபுரியும் இடத்தில் தற்போது பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் தொடர்ந்து பணிபுரிவதாக தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தின் நகர், ஊரகப்பகுதிகளில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் விசாகா கமிட்டியினர் முறையாக ஆய்வு செய்து தங்கள் பணிகளை சரிவர செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.
இதனால் பாலியல் குற்றச்சாட்டுகளை பெண்கள் வீட்டில் இருப்பவர்களிடம் தெரிவித்து, அவர்கள் மூலம் போலீசில் புகார் செய்கின்றனர். விசாகா கமிட்டி சுதந்திரமாக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை பணிபுரியும் இடத்தில் ஏற்படுத்தி, விசாகா கமிட்டியின் செயல்பாடுகளை கண்காணித்து முழுவீச்சில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

