/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே பீடர் ரோட்டில் வேரோடு மரங்கள் அகற்றம் விரிவாக்க பணிக்கு மாற்று நடவு உண்டா
/
ரயில்வே பீடர் ரோட்டில் வேரோடு மரங்கள் அகற்றம் விரிவாக்க பணிக்கு மாற்று நடவு உண்டா
ரயில்வே பீடர் ரோட்டில் வேரோடு மரங்கள் அகற்றம் விரிவாக்க பணிக்கு மாற்று நடவு உண்டா
ரயில்வே பீடர் ரோட்டில் வேரோடு மரங்கள் அகற்றம் விரிவாக்க பணிக்கு மாற்று நடவு உண்டா
ADDED : டிச 12, 2025 05:59 AM

விருதுநகர்: விருதுநகரில் ரயில்வே பீடர் ரோட்டில் வேரோடு மரங்கள் அகற்றம் செய்யப் பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளுக்கு வழிவிடவா இது போன்று மரங்கள் அகற்றப்பட்டுள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விரிவாக்க பணிக்கு மாற்று நடவு செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகரில் ரயில்வே பீடர் ரோட்டில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு வருகின்றன. இந் நிலையில் இங்குள்ள மரங்களையும் வேரோடு அகற்றி வருகின்றனர்.
ஏற்கனவே நகர்ப்பகுதிகளில் மரங்கள் குறைந்து வரும் சூழலில், ரோட்டேராம் இருந்த இந்த மரங்களை அகற்றியுள்ளது சுற்றுச்சூழலுக்கு மேலும் கேட்டினை ஏற்படுத்தும்.
விருதுநகர் ரயில்வே பீடர் ரோடு முக்கிய ரோடாக உள்ளது. ரயில்வே ஸ்டேஷனுக்கு நாள்தோறும் 100 ரயில்கள் வந்து செல்கின்றன. எனவே அதில் பயணம் செய்ய வந்து செல்வோர் இந்த ரோட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
விருதுநகரில் இருந்து நோயாளிகளை உயர் சிகிச்சைக்காக விரைவாக மதுரைக்கு அழைத்துச் செல்லவும் இந்த ரோடு பெரிதும் பயன்படுகிறது. இந்த வடிகால் பணியின் போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போது தான் இந்த ரோடு எவ்வளவு அகலமானது என தெரிந்தது. இப்போது படிப்படி யாக வடிகால் பணிகள் முடிந்து வரும் நிலையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் பெருகுகின்றன.
இந்நிலையில் தற்போது மரங்களை வெட்டி அகற்றியது மேலும் ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. ரோட்டின் இரு புறமும் மழை நீர் வடிகால் அமைக்க உள்ள நிலையில், ரோட்டில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் பெருக விடாதது மட்டுமே தீர்வாக இருக்கும்.

