/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு; மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியில் வசதிகள்
/
அரசு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு; மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியில் வசதிகள்
அரசு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு; மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியில் வசதிகள்
அரசு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு; மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியில் வசதிகள்
ADDED : ஏப் 11, 2024 06:29 AM
மத்திய அரசின் முன்னேற துடிக்கும் மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய 117 மாவட்டங்களில் முதல் பத்து மாவட்டங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.
இந்த திட்டம் நாடு முழுவதும் பரவியுள்ள மாவட்டங்களின் சமூக - பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புகோட்டை, சிவகாசி, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், காரியப்பட்டி அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளை மத்திய, மாநில நிதி பங்களிப்பில் வழங்கப்படுகிறது.
அருப்புக்கோட்டை ரூ. 50 கோடி, ராஜபாளையம் ரூ. 50 கோடி, ஸ்ரீவில்லிப்புத்துார் ரூ. 7 கோடி, சாத்துார் ரூ. 5 கோடி, காரியப்பட்டி ரூ. 3.5 கோடி செலவில் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
சிவகாசியில் அரசு மருத்துவமனைக்கு ரூ. 33 கோடியில் உட்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதற்கான பணிகளுக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் பாபுஜி கூறியதாவது:
மாவட்டத்தில் திருச்சுழி, கல்லம்மநாயக்கன்பட்டி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த தலா ரூ. 10 கோடி செலவில் பணிகள் துவங்கப்படவுள்ளது.
அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே இருந்தது போக கூடுதல் சி.டி., ஸ்கேன் கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார் அரசு மருத்துவமனைகளில் கம்யூட்டரைஸ்டு எக்ஸ்ரே மிஷின்கள் செயல்படவுள்ளது. கலெக்டர் ஜெயசீலன் மூலம் சி.எஸ்.ஆர்., நிதியுதவியில் மருத்துவமனைகளுக்கு தேவையான மிஷின்கள் பெறப்படுகிறது, என்றார்.

