/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆண்டாள் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
/
ஆண்டாள் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
ADDED : மே 01, 2025 05:51 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: கோடை விடுமுறை துவங்கிய நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு வெளிமாவட்ட பக்தர்கள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகிறது.
பள்ளி தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்குசெல்வது, ஆன்மிகம், குளிர் பிரதேச நகரங்களுக்கு சுற்றுலா செல்ல துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் 108 வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வெளிமாவட்ட பக்தர்கள் வருவது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இதில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மிகவும் கூடுதலாக வருகின்றனர்.
இவ்வாறு வருபவர்களின் நலன்கருதி குடிநீர், சுகாதார வசதி உட்பட பல்வேறு வசதிகளை கூடுதலாக செய்து தருவது அவசியமாகும். இதற்கு கோயில், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

