ADDED : ஆக 28, 2025 05:35 AM

ராஜபாளையம்,: ராஜபாளையம் தர்மா புரம் மாப்பிள்ளை விநாயகர் கோயில் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் ஊர் வலம் நடந்தது.
இந்த ஆண்டு விழாவிற்காக அருள் பொருள் அருளும் கணபதி, மங்கள கணபதி, விஜய கணபதி, சயன கணபதி, ஆனந்த கணபதி, மிர்த்தன கணபதி என அலங்கரிக்கப்பட்ட விநாயகர்களுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஏழு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற திருவிழாவில் திருஈங்கோய்மலை லலிதா சமாஜ யோகினிகள் உலக அமைதி வேள்வி, திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தனர்.
தினமும் கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு, இலவச திருமணங்கள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நல திட்டங்கள் வழங்கப்பட்டது. விழா நாட்களில் முழுவதும் மூன்று வேளை அன்னதானம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை மதுரை ஆதினம் ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை ரவுண்டானா, சங்கரன்கோவில் முக்கு வழியே பெரியாதி குளம் கண்மாயில் கரைக்கப் பட்டது.
ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் கோயில் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.