/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இந்தியாவை நாசம் செய்ய மட்டுமே இண்டியா கூட்டணி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடல்
/
இந்தியாவை நாசம் செய்ய மட்டுமே இண்டியா கூட்டணி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடல்
இந்தியாவை நாசம் செய்ய மட்டுமே இண்டியா கூட்டணி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடல்
இந்தியாவை நாசம் செய்ய மட்டுமே இண்டியா கூட்டணி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடல்
ADDED : மார் 02, 2024 05:14 AM

விருதுநகர் : இண்டியா கூட்டணி என்பது இந்தியாவை நாசம் செய்ய மட்டுமே, என விருதுநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. 2 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், 500 கிரிக்கெட் வீரர்களுக்கு தேவையான உபகரணங்களையும் முன்னாள்அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் ஆகியோர் வழங்கினர்.
பின் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: திமுக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ஒரு கையெழுத்தில் ஒழிப்பேன் என்று சொல்லி ஓட்டு வாங்கிய ஸ்டாலின் 3 ஆண்டுகளாகியும் தற்போது வரை நீட் தேர்வுக்கு ஒரு முடிவு கட்டவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பற்றி பேசி உள்ளார். அவர்களை போல் ஒரு அற்புதமான ஆட்சி வேண்டும் என பாரத பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழகத்தில் நல்லாட்சி நடத்தியது அ.தி.மு.க., என்பதுதான் இதன் மூலம் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இண்டியா கூட்டணி என்பது இந்தியாவை நாசம் செய்ய மட்டுமே.
அ.தி.மு.க., வரவேற்புக்காக பல கட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் அ.தி.மு.க.,வை நோக்கி பல கட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன.
பழனிச்சாமி தலைமையில் மெகா கூட்டணி உருவாகும். 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும், என்றார்.
பாண்டியராஜன் பேசுகையில், 28 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதற்கு வழிவகை செய்து கொடுத்தது அ.தி.மு.க., அரசு. இரட்டை இலை சின்னம் மீண்டும் பார்லி, தேர்தலில் வெற்றி பெறும். தீய சக்தி தி.மு.க., அரசு ஊழலை விட தற்போது போதைப் பொருட்கள் மூலம் தமிழகத்தை சீரழித்து வருகிறது, என்றார்.
மேற்கு மாவட்ட அவை தலைவர் விஜயகுமரன், ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராஜா பங்கேற்றனர்.

