/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலை பாலங்களில் அடிப்பகுதியில் கும்மிருட்டு; மின்விளக்குகளை பழுது பார்க்க எதிர்பார்ப்பு

ADDED : நவ 20, 2024 06:27 AM

விருதுநகர் : விருதுநகர் நான்கு வழிச்சாலை பாலங்களின் அடிப்பகுதியில் போதிய வெளிச்சம் இன்றி கும்மிருட்டாக உள்ளதால் சமூக விரோத செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
விருதுநகரின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக நான்கு வழிச்சாலை உருவெடுத்துள்ளது.
இன்றளவும் நான்கு வழிச்சாலையின் சர்வீஸ் ரோடு வழித்தடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மின் விளக்கு வசதி செய்யாமல் உள்ளன.
சில பகுதிகளில் தான் மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மின் விளக்கு வசதி செய்துள்ளனர்.
விருதுநகர் சிவகாசி ரோட்டிலும், விருதுநகருக்கு நுழையும் மதுரை ரோட்டிலும் நான்கு வழிச்சாலை பாலங்கள் உள்ளன. இவற்றின் அடிப்பகுதியில் சுத்தமாக வெளிச்சம் இல்லை.
மதுரை ரோட்டின் பாலத்தின் இருபக்கமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விளக்குகள் பழுதாகி கிடக்கின்றன. மேலும் இதே பகுதியில் தான் போலீசாரின் கண்காணிப்பு கேமராக்களும் உள்ளன. இந்நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்.
வாகனங்கள் திரும்பும் இடம் என்பதால் கிராஸ் செய்யும் பாதசாரிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதே போல் சிவகாசி ரோட்டில் ஒரு புறத்தில் ஓட்டல்களின் வெளிச்சமே போதிய அளவில் இருந்தாலும் அங்கும் மாநில நெடுஞ்சாலைத்துறையின் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன.
மறுபுற ரோட்டில் சுத்தமாக வெளிச்சம் இல்லை. இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றன. சிவகாசிக்கு கார்கள் முதல் கனரக வாகனங்கள் வரை சென்று இந்த பாலம் வழியாக திரும்புவதால் போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.
விருதுநகரின் முக்கிய பாலங்களான மதுரை ரோடு, சிவகாசி ரோடு பாலங்களின் அடிப்பகுதியில் பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சீரமைத்தும், தேவைப்படும் இடத்தில் வசதி செய்தும் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.