ADDED : நவ 17, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் வாடியான் தெருவைச் சேர்ந்தவர் அசோக் 70. இவர் நேற்று விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சென்னை மேன்சன் என்ற விடுதியின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்தார்.
பணி முடித்து தொட்டியில் இருந்து வெளியே வந்த போது மாடியில் இருந்து மதியம் 1:30 மணிக்கு தவறி கீழே விழுந்து பலியானார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

