/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மார்ச்1 முதல் புதிய தாமிரபரணி திட்டத்தில் குடிநீர்
/
மார்ச்1 முதல் புதிய தாமிரபரணி திட்டத்தில் குடிநீர்
மார்ச்1 முதல் புதிய தாமிரபரணி திட்டத்தில் குடிநீர்
மார்ச்1 முதல் புதிய தாமிரபரணி திட்டத்தில் குடிநீர்
ADDED : பிப் 28, 2024 07:07 AM

மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகருக்கு போதுமான குடிநீர் கிடைக்காமல் பிரச்சனை இருந்து வந்தது. இதில் அருப்புக்கோட்டை, விருதுநகருக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் நடந்து வந்தது. இதில் போதுமான அளவில் குடிநீர் கிடைக்காததால் நகரில் 15 நாட்களுக்கு ஒரு முறை, ஒரு பகுதி என சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் நடந்தது.
இதே போன்று சாத்தூருக்கு கயத்தாறு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. போதிய அளவு கிடைக்காததால் மக்கள் குடிநீர் இன்றி அலையும் நிலை ஏற்பட்டது.
இதை கருத்தில் கொண்டு இந்த 3 நகராட்சிகளுக்கும் புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.
தாமிரபரணி மற்றும் சிற்றாறு நதிகள் கலக்கும் இடமான சீவலப்பேரி ஆற்றின் கரையோரம் தரைமட்ட தொட்டிகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் பெற முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்காக அரசு 2019 ம், ஆண்டில், 444.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அதற்கான பணிகள் நடந்து வந்தது.
தற்போது, பணிகள் முடிவடைந்த நிலையில் தண்ணீர் வெள்ளோட்டம் விடப்பட்டது. 10 நாட்களுக்கு முன்பு சாத்தூருக்கும், கடந்த வாரம் விருதுநகருக்கும், நேற்று மாலை அருப்புக்கோட்டை சம்ப் களில் தண்ணீர் வந்தது.
அதிகாரிகள் கூறுகையில்,'' மக்களின் பயன்பாட்டிற்கு மார்ச் 1 முதல் புதிய குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.
முதற் கட்டமாக, சாத்தூருக்கு 25 லட்சம் லிட்டர், விருதுநகருக்கு 35 லட்சம் லிட்டர், அருப்புக்கோட்டைக்கு 65 லட்சம் லிட்டர் என குடிநீர் விநியோகிக்க பட உள்ளது. படிப்படியாக நிர்ணயிக்கப்பட்ட அளவில் குடிநீர் வழங்கப்படும். ஏற்கெனவே, இருந்த தாமிரபரணி திட்டங்களும் செயல்பாட்டில் இருக்கும்.,'' என்றனர்.

