/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை முன் தர்ணா
/
சாத்துார் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை முன் தர்ணா
சாத்துார் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை முன் தர்ணா
சாத்துார் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை முன் தர்ணா
ADDED : செப் 29, 2024 11:49 PM
சாத்துார் : விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே முத்தால்நாயக்கன்பட்டி திருமுருகன் பட்டாசு ஆலை முன் வெடி விபத்தில் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க கோரி மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
முத்தால்நாயக்கன்பட்டி திருமுருகன் பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் காலை 6:50 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலை அருகில் உள்ள கீழ ஒட்டம் பட்டி புதுக் காலனியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டன. கூரை, மின்விசிறி, டிவி, பிரிட்ஜ் சேதமடைந்தன. வீடுகளை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதியினர் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று பட்டாசு ஆலையில் சேதமடைந்த அறைகளை சீரமைக்கும் பணிகள் நடந்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து தங்கள் வீடுகளை உடனடியாக சீரமைக்காமல் பட்டாசு ஆலையை சீரமைக்ககூடாது என கூறி ஆலை முன்பு அப்பகுதியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்ததையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

