/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறப்பு விபத்து, அவசர சிகிச்சை பிரிவு அமைவது தாமதம்: காத்திருப்புக்கு பரிதவிப்பு தான் மிச்சமா என ஏக்கம்
/
சிறப்பு விபத்து, அவசர சிகிச்சை பிரிவு அமைவது தாமதம்: காத்திருப்புக்கு பரிதவிப்பு தான் மிச்சமா என ஏக்கம்
சிறப்பு விபத்து, அவசர சிகிச்சை பிரிவு அமைவது தாமதம்: காத்திருப்புக்கு பரிதவிப்பு தான் மிச்சமா என ஏக்கம்
சிறப்பு விபத்து, அவசர சிகிச்சை பிரிவு அமைவது தாமதம்: காத்திருப்புக்கு பரிதவிப்பு தான் மிச்சமா என ஏக்கம்
ADDED : ஜன 02, 2024 04:59 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு விபத்து, அவசர சிகிச்சை பிரிவு கொண்ட ட்ராமா கேர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
மருத்துவக்கல்லுாரி ஆன பிறகும் சில அவசர சிகிச்சைகளை மதுரை அரசு மருத்துவமனைக்கே தொடர்ந்து பரிந்துரைப்பதால் இழப்புகளும் அதிகரித்து வருகின்றன. மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள், 1 மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி உள்ளன. இவை தவிர 54 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 160 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 1993ல் சிவகாசியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 10க்கு அதிகமானோர் பலியாகினர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு விருதுநகரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய விபத்து, அவசர சிகிச்சை பிரிவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் ஒவ்வொரு ஆட்சி அமையும் போதும் மருத்துவக்கல்லுாரிக்கும், ட்ராமா கேர் அமைப்பதற்கும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்த சூழலில் 2020ல் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் மருத்துவக்கல்லுாரி அறிவிக்கப்பட்டு 2021 முதல் செயல்பட துவங்கியது. 2022ல் மருத்துவமனையிலும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு கூடுதல் சிகிச்சை பிரிவுகளும் செயல்பட துவங்கின. தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா கால ஆய்வுக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விபத்து, பாம்புக்கடி, சாலை விபத்துக்களில் அதிகமானோர் இறப்பதை கருத்தில் கொண்டு நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள மருத்துவ கல்லுாரி அருகிலே ட்ராமா கேர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதி அளித்தார்.
ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்றளவும் பட்டாசு, சாலை விபத்துக்கள், இதர பேரிடர்களின் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் வருகிறது. நான்கு வழிச்சாலையில் தான் அதிகளவில் விபத்துக்கள் நடக்கின்றன.
தற்போது லெவல் 3 அளவில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தாலும், அரசு அறிவித்தது போல் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் டிராமா கேர் அமைப்பது தான் உயிரிழப்புகள் குறைக்க உதவும். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. சாத்துார், ராஜபாளையம் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதோடு அறிவிக்கப்பட்ட ட்ராமா கேர் பிரிவை அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

