/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜூன் 11 முதல் 20 வரை தமிழக அரசை கண்டித்து தொடர் போராட்டம்--
/
ஜூன் 11 முதல் 20 வரை தமிழக அரசை கண்டித்து தொடர் போராட்டம்--
ஜூன் 11 முதல் 20 வரை தமிழக அரசை கண்டித்து தொடர் போராட்டம்--
ஜூன் 11 முதல் 20 வரை தமிழக அரசை கண்டித்து தொடர் போராட்டம்--
ADDED : மே 09, 2025 01:21 AM
ராஜபாளையம்: தாது மணல், மணல் உள்ளிட்ட கனிம வள கொள்ளையை தடுப்பது, காலிபணியிடங்களை நிரப்புதல் , புறம்போக்கு நிலங்களில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஜூன் 11 முதல் 20 வரை போராட்டங்கள் நடத்த உள்ளதாக மா. கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடந்தது. அரசியல் தலைமை குழு கே. பாலகிருஷ்ணன், வாசுகி, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் சண்முகம், மத்திய குழு சம்பத், குணசேகரன், பாலபாரதி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் 310 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து மே 20ல் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் ரயில் மறியல் ,மத்திய அரசு அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும்.
நெய்வேலி என்.எல்.சி., ஊழியர்களுக்கு இணையாக துாத்துக்குடி தெர்மல் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதற்கு எதிராக தெர்மல் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளதை கண்டித்து 22 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஞ்சமி நில மீட்பு நீர்நிலைப் புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையில் முன்வைத்து தமிழக மக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஜூன் 11 முதல் 20ம் தேதி வரை 10 நாட்கள் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீதான மத்திய அரசின் துல்லிய தாக்குதலை வரவேற்கிறோம். அதே நேரம் போர் வந்தால் இருநாட்டு பொதுமக்களும் பாதிக்கப்படுவர், என கூறினார்.

