ADDED : மார் 11, 2024 05:04 AM

சாத்துார்: தவக்காலத்தின் நான்காம் ஞாயிறை முன்னிட்டு சாத்துார் நென்மேனி இஞ்ஞாசியார் சர்ச்சில் கீழமுடிமன்னார்கோட்டை பாதிரியார் யூதா போஸ்கோ தலைமையில் ஒரு நாள் தியான வழிபாடு நடந்தது.
விருதுநகர் மறை மாவட்ட அதிபர், பாதிரியார் அருள்ராயன், சாத்துார் பாதிரியார் காந்தி துவக்கி வைத்தனர். இதில் மன்னிப்பு வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்பட்டது.
அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், காரியப்பட்டி, நிறைவாழ்வுநகர், பாண்டியன் நகர், ஆர்.ஆர்.நகர், ஒத்தையால், தும்முசின்னம்பட்டி, திருத்தங்கல், சாட்சியாபுரம், மரியானுாஸ் நகர், மீனம்பட்டி, வடபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள், அருட்சகோதர, சகோதரிகள் திரளானோர் பங்கேற்றனர்.
சர்ச் வளாகத்தில் இயேசு கிறிஸ்துவின் 14 பாடுகளை தியானிக்கும் சிலுவை பாதை வழிபாடுகள் நடந்தன.
பாதிரியார்கள் பீட்டர் ராய், எடிசன், மரியதுரை, ஜோசப் அமலன், ஜான் மார்ட்டின், பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

