/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெரிய மாரியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
/
பெரிய மாரியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
பெரிய மாரியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
பெரிய மாரியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
ADDED : மார் 21, 2024 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் நேற்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழைய கொடி மரத்திற்கு பதிலாக 28 அடி உயரமுள்ள தேக்கு மரத்திலான புதிய கொடிமரம் தயார் செய்து நேற்று பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி காலை 9:00 மணிக்கு நடந்தது.
கோயில் பூஜாரி சுந்தர்ராஜன் புதிய கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தார். அறநிலைத்துறை இணை ஆணையர் வளர்மதி, செயல் அலுவலர் தேவி, ஆய்வாளர் முத்து மணிகண்டன், கொடிமர உபயதாரர் மாகாளி குடும்பத்தினர், பக்தர்கள் பங்கேற்றனர்.