/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருங்காட்சியக பணிகள் துவக்கம் அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கம்
/
அருங்காட்சியக பணிகள் துவக்கம் அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கம்
அருங்காட்சியக பணிகள் துவக்கம் அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கம்
அருங்காட்சியக பணிகள் துவக்கம் அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கம்
ADDED : பிப் 14, 2024 05:53 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே புதிய அருங்காட்சியக கட்டடம் ரூ.6.8 கோடிக்கு கட்டுவதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்.
விருதுநகரில் அரசு அருங்காட்சியகம் வாடகை கட்டடத்தில் இயங்கி விருகிறது. இதில் 1200க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன. இதை சொந்தகட்டடத்திற்கு மாற்றி வருவாய் இழப்பை தடுக்கவும், பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பெரிதாக அமைக்கவும் திட்டமிடப்பட்டு தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது அதற்கான கட்டுமான பணிக்கு ரூ.6.8 கோடிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மூன்று தளங்களுடன், காட்சி கூடம், கல்வெட்டு காட்சி கூடம், நாணயவியல் காட்சி, சேகரிக்கப்பட்ட வைப்பு அறையும் உள்ளது.
அடிக்கல் நாட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கீழடி அருங்காட்சியகம் போல் விருதுநகரில் அருங்காட்சியகம் அமைய வேண்டும். மாவட்டத்தின் பருத்திகுடி, வெண்பு நாடு உள்ளிட்ட பழமை ஊர்களில் எத்தகைய சூழல் இருந்தது, மாவட்டத்தின் வரலாறு என்ன, தொல் பழங்கால வரலாறு எதை தொட்டு செல்கிறது, இங்கு வாழ்ந்த மக்களுடைய நாகரீகம் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறும், என்றார்.
கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மணிகண்டன், சாத்துார் ஆர்.டி.ஓ., சிவக்குமார், நகராட்சி தலைவர் மாதவன், காப்பாட்சியர் பால்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.

