/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழந்தை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

ADDED : மே 08, 2025 02:04 AM
விருதுநகர்: விருதுநகரில் குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரித்தார்.
அவர் கூறியதாவது:
பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது பதியப்படும் போக்சோ வழக்குகளில் அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வழிவகை உள்ளது.
இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க குழந்தைகள் உதவி மைய எண் 1098, பெண்களுக்கான உதவி மைய எண் 181ல் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர் விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.
பாலியல் குற்ற வழக்குகள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள நடைமுறைகளை அனைத்து போலீசாரும் பின்பற்ற வேண்டும். மாவட்டத்தில்உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.
கோடை விடுமுறையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடந்தால் உடனடியாக புகார் அளிக்கும் பட்சத்தில் குற்றம் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் மூலம் 188 நபர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தெரிவித்தார்.