ADDED : ஏப் 05, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மூளிப்பட்டியில் மூடிக்கிடக்கும் கிளை நுாலகத்தால் மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
விருதுநகர் மூளிப்பட்டியில் கிளை நுாலகம் ஒன்று உள்ளது. இது துவங்கிய புதிதில் கிராமத்தினர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் மக்கள் ஓய்வு நேரங்களில் வாசிக்க சென்று வந்தனர்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக இது பூட்டி கிடக்கிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மூடிக்கிடக்கும் இந்த கிளை நுாலகத்தை திறந்தால் கிராமத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறுவர்.

