/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் தேசபந்து மைதான சந்துகளில் கஞ்சா விற்பனை ஜரூர்
/
விருதுநகர் தேசபந்து மைதான சந்துகளில் கஞ்சா விற்பனை ஜரூர்
விருதுநகர் தேசபந்து மைதான சந்துகளில் கஞ்சா விற்பனை ஜரூர்
விருதுநகர் தேசபந்து மைதான சந்துகளில் கஞ்சா விற்பனை ஜரூர்
ADDED : ஜூலை 29, 2025 12:21 AM
விருதுநகர்: விருதுநகர் தேசபந்து மைதானத்தை சுற்றியுள்ள சந்துகளில் கஞ்சா விற்பனை தாராளமாகி வருகிறது. இதனால் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்கள், கடைக்காரர்கள் போதை ஆசாமிகளால் நிராதரவாகின்றனர்.
விருதுநகர் தேசபந்து மைதானம் மிக முக்கியமான பகுதி. இதை சுற்றிய பகுதிகளாக மீன் மார்க்கெட் செல்லும் வழி உள்ளிட்ட பல்வேறு சந்துகள் உள்ளன. இங்கு கஞ்சா விற்பனை தாராளமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இத்தனைக்கும் இப் பகுதியை சுற்றிலும் பள்ளிகள் ஆங்காங்கே உள்ளன. மேலும் நகரின் மையப்பகுதியாக வேறு உள்ளது. போலீஸ் அவுட்போஸ்ட் வேறு உள்ளது. இத்தனை இருந்தும் எளிதான சைகைகள், குறிப்பிட்ட இடங்கள் போன்றவற்றை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பது அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளால் குடிகாரர்கள் அட்டகாசம் தாங்க முடியாதி சூழலில், தற்போது கஞ்சா போதைவாசிகளின் நடமாட்டமும் மக்களை திகைப்படைய செய்துள்ளது. தேச பந்து மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் பலர் நடமாட முடியாத சூழல் உள்ளது. தொந்தரவு தரும் வியாபாரிகளுக்கே இந்த போதை ஆசாமிகள் தொந்தரவு அளித்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர்.

