/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முழு பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட் --அல்லல்படும் ராஜபாளையம் பயணிகள்
/
முழு பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட் --அல்லல்படும் ராஜபாளையம் பயணிகள்
முழு பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட் --அல்லல்படும் ராஜபாளையம் பயணிகள்
முழு பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட் --அல்லல்படும் ராஜபாளையம் பயணிகள்
ADDED : நவ 15, 2025 05:37 AM
ராஜபாளையம் : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இலவச கழிப்பறை, உணவகங்கள், பஸ்களுக்கான நேர அட்டவணை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஆறு மாதங்களை கடந்தும் ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அல்லல்பட்டு சென்று வருகின்றனர்.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் நகர் பகுதி நடுவே தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த நிலையில் கட்டடங்கள் பலமிழந்ததால் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி 40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு மே 29ல் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
தினமும் 300க்கும் அதிகமான பஸ்களும் ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்லும் இங்கு இதுவரை பயணிகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. பஸ்சிற்காக காத்திருக்கும் மக்கள் கிராமங்களுக்கு செல்லும் நேர அட்டவணை வைக்காமல் உள்ளனர். இதுபோல் எந்தெந்த பகுதியில் இருந்து அவர்களுக்கான கிராமங்களுக்கு செல்லும் ஊர் பெயர் வழித்தடங்களும் எழுதப்படவில்லை.
பணிக்கு சென்று வருபவர்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் நுழைவுப் பகுதி ஓரங்களிலும் உள் பகுதியிலும் டூவீலர் பார்க்கிங்காக மாற்றி ஆக்கிரமித்துள்ளனர். இரவில் பயணிகள் இயற்கை உபாதைக்கு வழியில்லாத வகையில் 8:00 மணிக்கு மேல் கட்டண கழிப்பறைகள் பூட்டப்படுகிறது. இதனால் சிறுமிகள், பெண்கள் ஒதுங்க வழி இன்றி பாதிக்கின்றனர்.
வளாகத்தில் கடைகள் ஏலம் விடப்படாததால் புதிய கடைகள் திறக்காமலும் உணவகங்கள் செயல்படாமலும் உள்ளது. தொடங்கிய சில நாட்களில் அடிப்படை வசதிகள் விரைவில் செய்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு ஆறு மாதங்களை கடந்தும் வசதிகள் பயணிகளுக்கு கிடைக்கவில்லை.

